சுய ஊரடங்கு கடைபிடிக்கும் நாளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தமுமுக!

Share this News:

சென்னை (22 மார்ச் 2020): சுய ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்கும் மக்களில் ஆதரவற்றவர்ளுக்கும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கும் தமுமுகவினர் உணவு வழங்கி ஆதரவளித்தனர்.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைய உள்ளது. ஆனால் தமிழகத்தில் இன்று இரவு 9 மணிக்கு நிறைவடைய இருந்த சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் காலையிலிருந்து தமுமுகவினர் உணவு வழங்கி வருகின்றனர்.

அதேபோல தமுமுகவினர் காலையிலிருந்து பல பகுதிகளிலும் சேவை செய்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply