தமிழ் நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 118 பேர் பலி!

Share this News:

சென்னை (30 ஜூன் 2021): கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 118 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் செவ்வாயன்று 4,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில்  அரசு மருத்துவமனைகளில் 71 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 47 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,506-ஐ எட்டியுள்ளது.

தமிழ் நாட்டில்  நேற்று  6,013 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,03,349 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மொத்தமாக 1,60,423 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 4,512 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது.  இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,599 ஆண்களும் 1,913 பெண்களும் அடங்குவர்.

இது தவிர தவிர அரியலூரில் 59 பேரும், செங்கல்பட்டில் 229, சென்னையில் 275, கோவையில் 563, கடலூரில் 115, தர்மபுரியில் 105, திண்டுக்கல்லில் 37, ஈரொட்டில் 493, கள்ளக்குறிச்சியில் 99, காஞ்சிபுரத்தில்76, கன்னியாகுமரியில் 92, கரூரில் 35, கிருஷ்ணகிரியில் 98, மதுரையில் 70, மயிலாடுதுரையில் 37, நாகப்பட்டினத்தில் 32, நாமக்கல்லில் 173, நீலகிரியில் 75, பெரம்பலூரில் 20, புதுக்கோட்டையில் 71, ராமநாதபுரத்தில் 15, ராணிப்பேட்டையில் 72, சேலத்தில் 302, சிவகங்கையில் 61, தென்காசியில் 34,  தஞ்சாவுரில் 215, தேனியில் 47, திருப்பத்தூரில் 27, திருவள்ளூரில் 104, திருவண்ணாமலையில் 125, திருவாரூரில் 49, தூத்துக்குடியில் 59, திருநெல்வேலியில் 49, திருப்பூரில் 281, திருச்சியில் 170, வேலூரில் 48, விழுப்புரத்தில் 52, விருதுநகரில் 48 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *