சென்னை (01 ஜூன் 2020): கொரோனா பரவலால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனா பரவலால் தொடர் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் தொடரும் பட்சத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப்போகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.