ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு!

Share this News:

சென்னை (29 செப் 2022): தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்த ஊர்வலங்களை தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த்துள்ளது.

மேலும் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply