அறிவிப்பை திடீரென திரும்ப பெற்றது தமிழக அரசு!

Share this News:

சென்னை (07 ஏப் 2020): இரும்பு, உரம், காகிதம் உட்பட 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதைத் திரும்பப் பெறுவதாக இப்பொழுது அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், உரம், ஜவுளி (பின்னாலாடைத் தொழில் தவிர்த்து), சர்க்கரை ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், வார்ப்படத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை செயல்படலாம் எனத் தமிழக தொழிற்சாலைகள் துறை அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதைத் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply