சென்னை (20 ஏப் 2020): தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 127 பேர் தனிமைப் படுத்தப்படுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 127 பேர் வாரணாசிக்கு ஆன்மீக பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து அவர்கள் திரும்ப முடியவில்லை.
பின்னர் உத்தரப் பிரதேச மாநில அரசு உதவியுடன் அவர்கள் சிறப்பு பேருந்து மூலம் தமிழகம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 127 பேரும் தனிமப் படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வாணராசி சென்ற பலருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.