துபாய் (20 ஜூன் 2021): நுரையீரல் புற்றுநோய்க்கான புதிய மருந்தை ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரித்துள்ளது.
நுரையீரல் புற்றுநோய்க்கு புதிதாக உருவாக்கப்பட்ட லுமக்ராஸ் என்ற மருந்துக்கு ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு அமெரிக்காக. இரண்டாவது நாடு ஐக்கிய அரபு அமீரகம்.
இந்த வாய்வழியாக செலுத்தும் மருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு உட்பட்ட வயதுவந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக, கோவிட்டுக்கு எதிரான உலகின் முதல் மருந்தான சோட்ரோவிமாப் என்ற மருந்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்தது. குறிப்பிடத்த்தக்கது.