சென்னை (20 மே 2020): கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டலின், “கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். கல்வி முக்கியம், அதைப்போலத்தான் உயிரும் முக்கியம்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2,3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.” என்று உதயநிதி ஸ்டலின் தெரிவித்தார்.