சென்னை (23 பிப் 2020): சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வரும் வித்யாராணி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்.
இந்நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியில் நிர்வாகியாக உள்ள வீரப்பனின் மனைவி, மகள் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டர்.