சென்னை (28 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என மருத்துவக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் வரலாறு காணாத அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாததால், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில், மருத்துவ நிபுணர்கள் குழு சென்னையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்காவிட்டால் ஜூன் மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என எச்சரித்துள்ளது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.