கொரோனா: அப்படி என்ன இருக்கிறது இந்த ரேபிட் டெஸ்ட் முறையில்?

Share this News:

சென்னை (19 ஏப் 2020): கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு வாங்கியுள்ளது.

கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகமானோருக்கு அதிவிரைவாக மேற்கொள்ள வேண்டி சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்க தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்ததா? அல்லது இல்லையா? அது அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாகவும் பல சர்சைகள் எழுந்துள்ளன.

இது இப்படியிருக்க. ரேபிட் டெஸ்ட் முறை என்றால் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில்,” நமது உடம்பில் கொரோனா வைரஸ் நுழைந்தால் உடனே ஆண்டிபாடி என்ற எதிரி உருவாகும் இது உருவானதா? அல்லது இல்லையா? என்பதை கண்டறியவே ரேபிட் கிட் உதவுகிறது,

இது கிட்டத்தட்ட கர்ப்பம் தரிப்பது போன்ற டெஸ்ட் முறை. இந்த கிட் மூலம், ரத்தத்தின் ஒரு துளியை இட்டு சோதனை மேற்கொள்ளும் போது, இரண்டு சிகப்பு கோடுகள் தோன்றினால் அது கொரோனா வருவதற்கான அறிகுறி அதாவது பாஸிட்டிவ், அதேவேளை மேலும் ஆண்டி பாடி உருவாகியுள்ளது என்றும் அர்த்தம்.

அதேவேளை ஒரு சிவப்பு நிற கோடு மட்டும் வந்தால், அது நெகட்டிவ் ஆண்டி பாடி உருவாகவில்லை என்றும், கொரோனா இல்லை என்றும் அர்த்தம்,” என்றார்.

இது முதல்நிலை சோதனை மட்டுமே மேலும் இதன்மூலம் பாஸிட்டிவ் வந்தால், பிசிஆர் உள்ளிட்ட அடுத்த கட்ட அடுத்தக் கட்ட சோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply