புதுடெல்லி (19 ஏப் 2020): நாட்டின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக புதிய உயர்மட்ட ஆலோசனைக் குழுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நியமித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில், திரு. ராகுல் காந்தி, திரு. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, திரு. கே.சி. வேணுகோபால், திரு. ப. சிதம்பரம், திரு. மணிஷ்திவாரி, திரு. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு நாள்தோறும் சந்தித்து, நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்து, காங்கிரஸ் கட்சியின் நிலைபாடுகளை தீர்மானிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.