திருச்சி (03 ஜன 2020): தமிழகம் மற்றும் கேரளாவில் 300 க்கும் அதிகமான சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் 300-க்கும் அதிகமான செயின் பறிப்பு குற்றங்கள் செய்துள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாநகரில் நடந்த 13 சங்கிலி பறிப்பு வழக்குகள் மற்றும் கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய 110 சவரன் தங்க நகைகளை முகமது முஸ்தபாவிடம் இருந்து மீட்டுள்ள போலீஸார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.