வேலூர் (25 ஜூன் 2020): வேலூர் அருகே அருகம்பாறை அரசு மருத்துவமனையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே சிகிச்சைக்காக வந்த 40 வயது பெண் ஒருவரை வெகுநேரமாக அங்கிருந்த இளைஞர் வட்டமடித்து வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அப்பெண், சீண்டலில் ஈடுபட முயன்றவரை செருப்பால் சரமாரியாக வெளுத்து வாங்கினார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த காவலர்களிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.