வாஷிங்டன் (10 நவம்பர் 2023): மில்லியன் கணக்கான ஜிமெயில் கணக்குகளை அடுத்துவரும் நாட்களில் டெலிட் செய்து நீக்கப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் இயங்குதளத்திற்கான முக்கிய அப்டேட்டின் ஒரு பகுதியாக, இந்த நீக்கம் செய்யப்பட உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக லாகின் செய்யப்படாத ஜிமெயில் முகவரிகளின் பயனர்களின் பாஸ்வேர்டுகள் ஹாக்கர்களுக்கு கசிந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இத்தகைய கணக்குகள் தற்போது ஆபத்தில் இருப்பதாகவும் ஜிமெயில் தெரிவித்துள்ளது.
இன்று (10 நவம்பர் 2023) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஹாக்கர்களின் ஃபிஷிங் தாக்குதல்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து கூகுள் பயனர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூகுள் விளக்கியுள்ளது.
ஏற்கனவே நாம் வைத்திருக்கும் ஜிமெயில் கணக்கு டெலிட் செய்யப்படாமல் காக்கும் வழிகளை இந்நேரம்.காம் வழங்குகிறது.
- ஒருமுறையாவது உங்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து ஒரு இமெயில் அனுப்பலாம். (அல்லது)
- லாகின் செய்தபின் ஒரு முறை கூகுள் சர்ச் செய்யலாம். (அல்லது)
- Google Play Store வழியாக ஏதேனும் ஒரு ஆப்-ஐ பதிவிறக்கலாம். (அல்லது)
- கூகுள் ட்ரைவ் போன்ற கூகுள் தரும் வசதியை ஒருமுறை பயன்படுத்தலாம்.
மேற்கூறிய முறையில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவதன் மூலம், கணக்கு டெலிட் செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க இயலும்.
– இந்நேரம்.காம்