காபூல் விமான நிலையத்தை அதிர வைத்த வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

Share this News:

காபூல் (27 ஆக 2021): ஆப்கானிஸ்தன் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 90 உயிரிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், காபூல் இரண்டு தற்கொலை குண்டுவீச்சாளர்கள் மற்றும் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் மக்கள் கூட்டத்தைத் தாக்கியதில் குறைந்தது 90 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க துருப்புக்களும் கொல்லப்பட்டதாகவும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி, தலிபான்கள் “குண்டுவெடிப்பைக் கண்டித்துள்ளனர்”,இஸ்லாமிக் ஸ்டேட் குழு அதன் அமாக் செய்தி சேனலில் இந்த படுகொலைகளுக்கு பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இரட்டை வெடிப்புகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டில் இன்னும் குறைந்தது 20 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் 140 ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்களும் வெளியேற்றப்படுவதற்காக காத்திருப்பதாக நம்பப்படுகிறது.

ஆப்கான் நிலமை மேலும் மோசமடைந்து வருவதால் உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *