மசூலிப்பட்டினம் (20 டிச 2022): ஆந்திரா, மசூலிப்பட்டணம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்காள் தங்கி படிக்கின்றனர். இப்பள்ளியில், தலைமை ஆசிரியராக இருப்பவர் ஆனந்த்.
இவருடன் ஒப்பந்த பெண் ஆசிரியை ஒருவரும் வேலை செய்து வருகிறார். இந்த பள்ளிக்கு, மொத்தமே 2 ஆசிரியர்கள் தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இருவரும் தனிமையில் இருந்ததை ஒரு மாணவன் செல்ஃபோனில் வீடியோவாக எடுத்துள்ளான். மேலும் அந்த மாணவன் அந்த வீடியோவை தன் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளான்.
அதை அறிந்த தலைமை ஆசிரியர், அவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட மாணவன் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து இருவரும் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.