ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் மரணம் – பதிலளிக்காமல் மழுப்பும் முதல்வர்!

Share this News:

அஹமதாபாத் (06 ஜன 2020): குஜராத்தில் ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1,235 குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 107 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், இத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *