தவறான வாட்ஸ் அப் மெஸேஜால் தரை மட்டமாக்கப் பட்ட 300 முஸ்லிம் வீடுகள்!

Share this News:

பெங்களூரு (21 ஜன 2020): கர்நாடகாவில் பாஜக குழுமத்தில் வெளியான தவறான வாட்ஸ் அப் மெஸேஜால் 300 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.

பெங்களூரில் பொலந்தூர் ஏரி அருகே வசித்த சுமார் 300 முஸ்லிம் வீடுகள்தான் இடிக்கப் பட்டுள்ளன.

திருத்தப் பட்ட குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு . நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாஜகவின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பெங்களூர் பெலந்தூர் ஏரி குறித்தும் அப்பகுதியில் வசிப்பவர்கள் குறித்தும், அவர்கள் வங்கதேச மக்கள் என்றும் பொய்யான பார்வேர்ட் செய்திகள் வந்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து இரண்டு நாளில் 300 குடும்பங்களின் வீடுகளை இடித்துத் தள்ளியுள்ளனர்.

பின்பு அவர்கள் அனைவரும் “நாங்கள் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்தான், வங்கதேசம் எங்கிருக்கிறது என்று கூட தெரியாது. எங்கள் எல்லோரிடமும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் உள்ளன. நாங்கள் இந்தியர்கள்தான் ஆய்வு செய்து பாருங்கள்” என கதறியுள்ளனர். இடிக்கப் பட்ட வீடுகளில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர்களின் வீடுகளும் அடங்கும். பின்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அவர்கள் அனைவரிடமும் உரிய ஆவணங்கள் இருந்தன. மேலும் பரவியது பொய்யான தகவல் என்பதையும் உணர்ந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு மாற்று இடமோ, வீடோ இதுவரை வழங்கப்படவில்லை.

இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டம் முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்ட நிலையில் இஸ்லாமிய மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அச்சம் எழுந்தது. தற்போது அதேபோல் முதல் கட்டமாக, இஸ்லாமிய மக்கள் பாஜக ஆளும் கர்நாடகாவில் குறி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *