கனடாவில் தமிழக மாணவிக்கு கத்தி குத்து!

Share this News:

டொராண்டோ (25 ஜன2020): கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை, ஒருவர் கத்தியால் குத்திய கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள் ஆஞ்சலின் ரேச்சல் (23) கனடா நாட்டில் உள்ள டொரண்டோ யாா்க் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா்.

இவரை அங்குள்ள ஒருவா் ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்துள்ளாா். ஆனால், ஆஞ்சலின் அவரது காதலை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த நபா் ஆஞ்சலினை வெள்ளிக்கிழமையன்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளாா். பலத்த காயத்துடன் சரிந்த ஆஞ்சலின், கனடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கனடா நாட்டு காவல் துறையினா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்தியால் குத்திய நபர் ஆசியாவை சேர்ந்தவர் என்று கனடா போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நாட்டினர் என்பது குறித்து தகவல் இல்லை.

இதற்கிடையே கனடாவில் உள்ள மகளுக்கு உதவ வேண்டியும், அங்கு செல்ல அவசரமாக விசா ஏற்பாடு செய்ய வேண்டியும் மாணவியின் தந்தை மத்திய அரசை நாடியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *