பி.எஸ்.என்.எல் மூடலா? – மத்திய அரசு விளக்கம்!

Share this News:

புதுடெல்லி (06 பிப் 2020): பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் மூடப்படாது என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைசசர், “பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., எனப்படும், ‘பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட்’ மற்றும் எம்.டி.என்.எல்., எனப்படும், ‘மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடட்’, ஆகிய நிறுவனங்களை மூடமாட்டோம். அவற்றை வலுப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்நிறுவனங்களின் நிலங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும், சரியான முறையில் பயன்படுத்தப்படும்.” என்றார்

மேலும், ‘இணையதளம் மூலம், மக்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவது, அடிப்படை உரிமைதான். எனினும், அந்த உரிமையை தவறாக பயன்படுத்தக்கூடாது. நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். வன்முறைகள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட, இணையதளம் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதனை யாராலும் மறுக்க முடியாது. காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான், அந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பும், இணையத்தின் மூலம் தன் காரியத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது.” என்று அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *