பத்ம சேஷாஸ்திரி பள்ளி ஆசிரியரின் காம லீலைகளும் மாணவிகளின் பரபரப்பு கடிதமும்!

Share this News:

பத்ம சேஷாஸ்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலின் காம லீலைகள் குறித்து அடுதடுத்து வரும் தகவல்களை அடுத்து அவர் குற்றத்தை ஒப்புக்கொன்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் பயின்ற மாணவிகள் அளித்த புகாரை அடுத்து அவர் தற்போது கைது செய்யப்படுள்ளார்.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல் குறித்த வெளியான இன்ஸ்டராகிராம் பதிவுகளை பார்த்து முன்னாள் மாணவி கிருபாளினி என்பவர் புகார் அளித்திருந்தார். ஆசிரியர் ராஜகோபால் மீது அப்போது பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் அவரது பாலியல் தொந்தரவால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் புகாரளித்திருந்தார்.

மேலும் ஏற்கனவே ஆசிரியர் ராஜகோபாலினால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளிடமும் தகவல்களையும், ஆதாரங்களையும் சேகரித்த கிருபாளினி அவரது இன்ஸ்டாக்கிராமில் அனைத்து தகவல்களையும் பகிர்ந்தார். அதன் பிறகே இவ்விவகாரம் பூதாகரமானது.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நட்சத்திரங்களும் அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி இருந்தனர். இந்த சூழலில் ராஜகோபால் மீது போக்ஸா சட்டம் பாய்ந்துள்ளது.

ராஜகோபாலை கைது செய்த போலீசார் வடபழனி காவல்நிலையத்தில் வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷ்னர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஆசிரியர் ராஜகோபால் தன்னுடைய செல்போன், லேப்டாப்பில் இருந்து பல குருஞ்செய்திகளையும், போட்டோக்களையும் அழித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ராஜகோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகளை வகுப்பறையில் கிண்டல் செய்வதும், இரட்டை அர்த்ததில் பேசுவதை ஜாலியாக தான் செய்து வந்ததாகவும், இது இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் வாக்குமூலத்தில் ராஜகோபால் தெரிவித்துள்ளார். நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

இதற்கிடையே இந்த பள்ளியாலும், ஆசிரியர் ராஜகோபாலாலும் மேலும் பாதிக்கப்பட்ட பல மாணவ மாணவியர் சார்பாக பள்ளி டீனுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் பலரையும் கண்ணீர் வரவழைக்கும் வகையில் உள்ளதாம் . இதனை அடுத்து பத்ம சேஷாத்ரி பள்ளி மீது மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *