பிடிவாதத்தை கைவிடுகிறாரா சீமான்? – அதீத பரபரப்பில் நாம் தமிழர் தொண்டர்கள்!

Share this News:

திமுகவுடன் கடும் எதிர்ப்பை காட்டி வந்த சீமானின் சமீபத்திய நடவடிக்கைகள் பல்வேறு யூகங்களுக்கும், அனுமானங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

முதல்வர் ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்தே பல்வேறு யூகங்களும், அனுமானங்களும் தமிழக அரசியலில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

சீமானை பொறுத்தவரை திமுக என்றாலே அலர்ஜி.. ஸ்டாலின் என்றாலே ஆகாது. திமுக எதிர் கட்சியாக இருந்தபோதுகூட அதிமுகவை விட்டு, மேடைக்கு மேடை ஸ்டாலினை மட்டுமே சீமான் விமர்சித்து கொண்டே இருப்பார்.

ஆனால் ஸ்டாலின் முதல்வரான பின்னர், சீமானின் அப்பா இறந்தபோது, ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டார், அதுமட்டுமல்லாமல் சீமானுக்கு போன் செய்து ஆறுதல் சொன்னார். இந்த சம்பவம் சீமானை ரொம்பவே நெகிழ வைத்துவிட்டது. அதனால்தான், 2 நாளைக்கு முன்பு பாரதிராஜாவின் துணையுடன் ஸ்டாலினை சந்தித்து, நன்றி சொன்னதுடன் கொரோனா தடுப்பு பணிக்காக 5 லட்ச ரூபாயையும் வழங்கினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு, சீமானின் பேச்சில் நிறைய மாறுதல் தென்பட்டது.. ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்றார். ஸ்டாலினின் பெருந்தன்மையை பாராட்டினார். கொரோனா தடுப்பு பணி வேகமாக நடக்கிறது என்றார்.

சமீபகாலமாக அதிமுகவின் மவுசு குறைந்து வரும் நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சியை அரவணைத்து போக ஸ்டாலினும் முன் வந்துள்ளதுபோல தெரிகிறது. இதனால் நாம் தமிழர் தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் ஆர்வலர்களும் நடக்கப்போவதை எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளனர்.


Share this News:

Leave a Reply