பிரதமர் மோடி, அமித்ஷா பெயரில் போலி தடுப்பூசி சான்றிதழ் – அதிர்ச்சித் தகவல்!

Share this News:

பாட்னா (08 டிச 2021): பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பல முக்கிய தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக போலியாக சான்றிதழ் வழங்கியது தெரிய வந்துள்ளது.

அந்த போலி தடுப்பூசி பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதை கண்டதும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அர்வால் மாவட்டத்தில் உள்ள கர்பி போலீஸ் எல்லைக் குட்பட்ட பகுதியில் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. 2 தவணை தடுப்பூசியும் அவர் செலுத்திக் கொண்டதாக படத்துடன் தகவல் இடம்பெற்றுள்ளது.

மோடியின் படமும், பெயரும் அந்த சுகாதார மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியலில் எப்படி சேர்ந்தது என்பது பற்றி புள்ளிவிவர ஆபரேட்டர்கள் பிரவீன்குமார், வினய்குமார் ஆகிய 2பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் இதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து பீகார் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சஸ்பெண்டு செய்யப்பட்ட 2 பேரும் உள்ளூர் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘எங்களது மேனேஜர் இந்த பெயர்களை சேர்க்கும்படி கூறினார். அதன் பேரில்தான் நாங்கள் அந்த பணிகளை செய்தோம்’’ என்றனர். இதையடுத்து கூடுதல் விசாரணைக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *