ஹிஜாப் அனுமதி கோரிய மாணவிகளை பயங்கரவாதிகள் என அழைத்த பாஜக தலைவர்!

Share this News:

உடுப்பி (17 மார்ச் 2022): ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகள் “தேச விரோதிகள்” மற்றும் “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்று பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரி மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா கூறியுள்ளார்.

இதுகுறித்து சுவர்ணா செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதிமன்றத்தை அணுகியது மாணவிகள் அல்ல, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறிக்கைகள் கொடுப்பதன் மூலம் கற்றறிந்த நீதிபதிகளை புறக்கணிக்கிறார்கள். அவர்களின் கருத்து நீதிமன்ற அவமதிப்புக்குச் சமம்” என்றார்.

ஹிஜாப் இஸ்லாத்தின் கட்டாய மதப் பழக்கம் அல்ல எனக் கூறி ஹிஜாப் அனுமதி கோரி மாணவிகள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து, கல்வி நிறுவனங்களில் முக்காடு அணிவதற்கான தடையை உறுதி செய்தது.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் சுவர்ணா, முழு நாட்டுக்கும் நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *