தாஜ்மஹாலுக்கு உத்திர பிரதேச அரசு நோட்டீஸ்!

Share this News:

ஆக்ரா (20 டிச 2022): 370 ஆண்டு கால தாஜ்மஹால் வரலாற்றில் முதன்முறையாக கேணி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு நோட்டீஸ் வந்துள்ளது. பல்வேறு பில்களை செலுத்தாததால், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளதாகவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தொல்லியல் துறைக்கு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தவறு என்றும், விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உ.பி அரசு மொத்தம் மூன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவற்றில் இரண்டு தாஜ்மஹாலுக்கும் ஒன்று ஆக்ரா கோட்டைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் ரூ.1 கோடிக்கு மேல் பாக்கி உள்ளதாகவும், ஆக்ரா கோட்டை ரூ.5 கோடிக்கு மேல் பாக்கி உள்ளதாகவும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *