உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இறுதிச் சடங்கு முடிந்து உறவினர்கள் ஊர் திரும்பத் தொடங்கிய போது அவர் நண்பனின் தீயில்குதித்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனந்த் (40) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவரது நெருங்கிய நண்பர் உத்திர பிரதேசம் நாக்லா கங்கரை சேர்ந்த அசோக் (42). புற்றுநோயால்…

மேலும்...

திருமண விருந்தில் கறி கிடைக்காததால் ரணகளமான திருமண நிகழ்ச்சி – வீடியோ!

பாக்பத் (14 பிப் 2023): கல்யாண வீட்டில் எப்போது எதற்காக சண்டை வரும் என்று சொல்ல முடியாது. பப்படம் தீர்ந்து போவது, கோழியின் லெக் பீஸ் கிடைக்கவில்லை என பிரச்சனை செய்வது, பிடித்தமான பாடல் ஒலிக்காமல் இருப்பது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளால் சண்டைகள் வரும். இப்படித்தான் உத்திரபிரதேச மாநிலம் பாக்பத்தில் ஒரு சின்ன காரணத்தால் கல்யாண வீடு ரணகளமாகியுள்ளது. திருமண பந்தலில் திருமண விருந்து பரிமாறப்பட்டபோது மணமகன் மாமாவுக்கு கறி கிடைக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத சிறுவன் மீது பள்ளி மேலாளர் கொடூர தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ!

லக்னோ (13 பிப் 2023): த்தரபிரதேச மாநிலம், மேஜா நகரில் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறி எட்டு வயது சிறுவனை பள்ளி மேலாளர் அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் குப்தா அவரை ஒரு தடிமனான குச்சியால் அடிக்கும் போது குழந்தை பெஞ்சில் படுத்திருப்பதைக் வீடியோவில் காணலாம். தற்போது குற்றவாளி 28 வயது யோகேஷ் குப்தா என்ற் பள்ளி மேலாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். “இந்த சம்பவம் மூன்று…

மேலும்...

இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – சிறுபான்மை ஆணையத்தில் அதிகரிக்கும் புகார்கள்!

புதுடெல்லி (13 பிப் 2023): நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்நிலையில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்ட மொத்த புகார்கள் மற்றும் மனுக்களில் 71 சதவீதம் முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் முஸ்லிம் சமூகம் தொடர்பான அதிகபட்ச புகார்கள் சிறுபான்மை ஆணையத்துக்கு கிடைத்துள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சின்…

மேலும்...

யோகி ஆதித்யநாத் இல்ல காவல் படை வீரர் மர்ம மரணம்!

லக்னோ (21 ஜன 2023): உத்தர பிரதேசத்தில் ஆஷியானா பகுதியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (வயது 25) என்ற பாதுகாப்பு வீரர் கடந்த ஒரு மாத காலம் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் அலிகாரி நகரின் கெய்ர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து அரசு வாகனத்தில் தனது முகாமுக்கு அவர் திரும்பியுள்ளார்….

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி மசூதி இடிப்பு!

பிரக்யாராஜ் / அலஹாபாத் (17 ஜன 2023): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி மசூதி பொதுப்பணித் துறையால் இடிக்கப் பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் (அலஹாபாத்) ஹண்டியா பகுதியில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷெர்ஷா சூரி காலத்தில் கட்டப்பட்டது இந்த மசூதி. தற்போது ஜிடி சாலையை விரிவு படுத்துவதற்காகவே இந்த மசூதி இடிக்கப்பட்டது என்று பொதுப் பணித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மசூதியை இடிப்பதற்கான முன்மொழிவுக்குத்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரை மூலம் உத்திர பிரதேசத்தில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் காங்கிரஸ்!

புதுடெல்லி (27 டிச 2022): 2024 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளின் தலைமையை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்ராவின் உத்தரபிரதேச சுற்றுப்பயணத்திற்கு SP மற்றும் BSP இரண்டும் அழைக்கப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பி.எஸ்.பி. தலைவர் மாயாவதி, ஆர்.எல்.டி. காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் பலர் ஜோடோ யாத்திரைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பாரத் ஜோடோ யாத்ரா மூலம் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே இதன்…

மேலும்...

தாஜ்மஹாலுக்கு உத்திர பிரதேச அரசு நோட்டீஸ்!

ஆக்ரா (20 டிச 2022): 370 ஆண்டு கால தாஜ்மஹால் வரலாற்றில் முதன்முறையாக கேணி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு நோட்டீஸ் வந்துள்ளது. பல்வேறு பில்களை செலுத்தாததால், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளதாகவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தொல்லியல் துறைக்கு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவறு என்றும், விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உ.பி…

மேலும்...

மதரஸாக்களுக்கான வருமானம் குறித்து விசாரணை நடத்த அரசு முடிவு!

லக்னோ (22 நவ 2022): உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் வருமான ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக உ.பி அரசு நடத்திய சர்வேயில் பெரும்பாலான மதரஸாக்கள் ஜகாத்தை வருமானமாக அறிவித்துள்ளன. இந்த விசாரணையின்படி1500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் எங்கிருந்து இந்த ஜகாத் (நன்கொடை) பெறுகின்றன என்பது இப்போது கண்டறியப்படும். குறிப்பாக நேபாள எல்லையில் அமைந்துள்ள உ.பி., மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில், வருமான ஆதாரம் குறித்த…

மேலும்...

கல்லறைக்கு அனுப்படுவீர்கள் – வீடுகளை இடிப்போம் – காவல்துறை அதிகாரியின் துவேஷ பேச்சு!

லக்னோ (13 அக் 2022): உத்திர பிரதேசத்தில் துர்கா பூஜைக்கு தடையாக இருப்பவர்கள் கல்லறைக்கு அனுப்பப்படுவீர்கள், உங்கள் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்படும் என்று ஒரு காவல்துறை அதிகாரி துவேஷத்துடன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காடந்த 10 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள பல்திராயா பகுதியில் நடந்த துர்கா பூஜை ஊர்வலத்தின்போது, ஊர்வலம் ஒரு மசூதியை நெருங்கியபோது, ஊர்வலத்தில் ஒழிக்கப்பட்ட பாடல் ​​உரத்த குரலில் பாடியதால் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்…

மேலும்...