அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Share this News:

கலிபோர்னியா (20 டிச 2022): அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அதிகாலை 2.34 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 3.30 மணியளவில் பல்வேறு இடங்களில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வரத் தொடங்கின.

Earthquake Strikes Northern California


Share this News:

Leave a Reply