மாணவி தற்கொலை வழக்கில் பாஜக தொண்டர் கைது!

Share this News:

பெங்களூரு (16 ஜன 2023): கர்நாடகாவில் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டம் குத்ரேமுக் பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் (25), அப்பகுதியில் பாஜக பிரமுகராவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார்.

பின்பு மாணவியை நித்தேஷ் திருமணம் செய்ய மறுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கில் பாஜக பிரமுகரான நித்தேஷ் கைது செய்யப் பட்டுள்ளார்

தற்கொலை செய்துகொண்ட மாணவி மரணத்திற்கு முன்பு எழுதிய கடிதத்தில், தனது மரணத்திற்கு நித்தேஷ் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் தற்கொலைக் கடிதத்தில், நித்தேஷ் தன்னை காதலிப்பதாக பொய் கூறியதாகவும், தன்னை ஏமாற்றி சித்திரவதை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏமாற்றப்பட்ட மாணவி பூச்சி மருந்தைக் குடித்ததால் ஜனவரி 10 ஆம் தேதி, மங்களூரில் உள்ள ஏஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில், மகளின் மரணத்திற்கு காரணமான நித்தேஷ் மீது புகார் அளித்தும் குதுரேமுக் காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்ய தயாராக இல்லை என்று மரணித்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கண்டனங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, காவல்துறை கண்காணிப்பாளரின் தலையீடு ஏற்பட்டது. அதன் பிறகே, குற்றம் சாட்டப்பட்ட பாஜக பிரமுகர் நித்தேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *