பரவை முனியம்மா மரணம்!

மதுரை (29 மார்ச் 2020): பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா(76) காலாமானார். தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர், ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் மூலம் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர், சிங்கம் போல பாடல் மூலம் பிரபலமானவர். பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தவர், சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி…

மேலும்...

பிரபல தமிழ் இளம் நடிகர் திடீர் மரணம்!

சென்னை (27 மார்ச் 2020): பிரபல தமிழ் இளம் நடிகர் சேதுராமன் திடீரென மரணம் அடைந்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தவர் நடிகர் டாக்டர் சேதுராமன். அதன் பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் சேதுராமன் தனது 36 வது வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

பிரபல இயக்குநர், நடிகர் விசு மரணம்!

சென்னை (22 மார்ச் 2020): பிரபல இயக்குநரும் நடிகருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித்…

மேலும்...

குடியுரிமை சட்டம் குறித்து முதன் முதலாக வாய் திறந்த நடிகர் விஜய்!

சென்னை (15 மார்ச் 2020): குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் விஜய் வாய் திறந்துள்ளார். நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிறன்று சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். இந்தநிகழ்ச்சியில் நடிகர் விஐய் பேசியதாவது: நாட்டில் மக்களுக்குத் தேவையானதைத்தான் சட்டமாக உருவாக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது. விஜய் சேதுபதி பெயரில் மட்டுமல்ல; எனக்கு மனதிலும் இடம்…

மேலும்...

விஜயை விடாது துரத்தும் வருமான வரித்துறை!

சென்னை (12 மார்ச் 2020): நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில்…

மேலும்...

பிரபல நடிகர் நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

நியூயார்க் (12 மார்ச் 2020): பிரபல நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. ஒரு நாட்டையும் அந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சன் ஆகியோருக்கும் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்தபோது, உடல் சோர்வு மற்றும்…

மேலும்...

மரைக்காயர் – சினிமா ட்ரைலர் VIDEO

மோகன் லால், அர்ஜுன், பிரபு நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ள படம் மரைக்காயர். இயக்கம், பிரியதர்ஷன். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும்...

ஜிப்ஸி – சினிமா விமர்சனம்!

சிலர் தான் தைரியமாக அரசியல் அவலங்களை படத்தில் முன்வைக்கிறார்கள். அந்த தைரியசாலிகளில் ஒருவர் இயக்குனர் ராஜூ முருகன். ஜோக்கர் படத்தின் பின் தற்போது ஜிப்சி மூலம் அதிரடி கொடுத்திருக்கிறார். ஹீரோ ஜீவா சிறுவயதிலே தன் தந்தை, தாயை இழக்கிறார். ஆதரவற்ற அவரை ஒரு குதிரைக்காரர் எடுத்து வளர்க்கிறார். நாடோடியாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ஊர்களுக்கு சுற்றி திரிகிறார்கள். ஒரு நாள் அந்த குதிரைக்காரர் ஜீவாவிடம் ஒரு விசயத்தை சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். ஆதரவற்ற ஜீவாவுக்கு சே…

மேலும்...

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தமிழ் திரைப்பட நடிகர் கைது!

சென்னை (05 மார்ச் 2020): மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக திரைப்பட நடிகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகா் 7-ஆவது பிரதான சாலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் சூா்யகாந்த். இவரது மகன் விஜய் ஹரீஸ் (25). இவா் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறாா். சூா்யகாந்தும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளாா். இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவி, விஜய் ஹரீஸிடம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளாா். அந்த மாணவியை…

மேலும்...

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – சினிமா விமர்சனம்!

துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன், ரித்து உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக இருக்கும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹீரோயின் ரிதுவர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி…

மேலும்...