சென்னை (27 மார்ச் 2020): பிரபல தமிழ் இளம் நடிகர் சேதுராமன் திடீரென மரணம் அடைந்துள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தவர் நடிகர் டாக்டர் சேதுராமன். அதன் பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில் சேதுராமன் தனது 36 வது வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.