அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

புதுடெல்லி (13 ஜூன் 2020): அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முறையாகாது என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர்…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 11,458 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (13 ஜூன் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 386 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

மேலும்...

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (12 ஜூன் 2020): சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நேற்று வழக்கு…

மேலும்...

கேரளா ஜமாத்தே இஸ்லாமியின் மற்றும் ஒரு சாதனை!

வயநாடு (12 ஜூன் 2020): கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு வெள்ளத்தால் வீடுகளை இழந்த 25 குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கேரளாவில் கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக வயநாடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதில் நிலச்சரிவால் 25 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. திக்கற்று நின்றவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு அனைவருக்கும் வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், ஜமாத்தே இஸ்லாமியின்…

மேலும்...

முரண்டு பிடித்த போலீஸ் – போராடி வென்ற ஆத்தியா ஃபிர்தவ்ஸ் !

லக்னோ (12 ஜூன் 2020): மத வெறுப்பூட்டும் வகையில் பேசிய மருத்துவர் அரத்தி தேவ் லால்சந்தானி (Arati Dave Lalchandani) மீது வழக்கு தொடுக்க போலீஸ் மறுத்தபோதும் சட்ட நுணுக்கங்களை கூறி வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளார் கேம்பஸ் ஃப்ரண்ட்டைச் சேர்ந்த ஆத்தியா ஃபிர்தவ்ஸ். கடந்த ஜுன் 2 அன்று உ.பி. கான்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவத்துறை முதல்வர் மருத்துவர் அரத்தி லால் சந்தானி அதே கல்லூரியின் மருத்துவமனையில் கொரோனா-வுக்காக சிகிச்சை பெற்றுவரும் முஸ்லிம்களை “தீவிரவாதிகள்”…

மேலும்...

கொரோனா வைரஸ் – இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்தியா கடந்த 1ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10 ஆயிரம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை சந்தித்து வருகிறது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி பாஜக தலைவர் சஞ்சய் சர்மா பலி!

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி பாஜக தலைவர் சஞய் சர்மா உயிரிழந்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி பாஜகவின் சேர்மன் கமிட்டி தலைவராக இருந்த சர்மா, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். சஞ்சய் சர்மா மறைவுக்கு டெல்லி பாஜக பொதுச் செயலாளர் ராஜேஷ் பாட்டியா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஊரடங்கு காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த…

மேலும்...

விலை பேசும் பாஜக – கூவத்தூர் ஸ்டைலில் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் அடைப்பு!

ஜெய்ப்பூர் (11 ஜூன் 2020): ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையில் ராஜஸ்தானில் முழு அளவிலான அரசியல் போர் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக ரூ.25 கோடியை வழங்குவதாகக் கூறியுள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு…

மேலும்...

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை!

புதுடெல்லி (11 ஜூன் 2020): மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் பயனாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சி.ஜி.எச்.எஸ். என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் கவர்னர்கள் மற்றும் துணை கவர்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் இந்நாள்…

மேலும்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி!

திருப்பதி (11 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு காரணமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் ரூ.3,000க்கு விற்கப்பட்டுள்ளன. தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரிடையாக பெற மிக நீண்ட வரிசையில்…

மேலும்...