காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாஸிட்டிவ் – பீதியில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏக்கள்!

அஹமதாபாத் (15 ஏப் 2020): குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, உள்துறை அமைச்சர் மற்றும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் செவ்வாயன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இவர்களை சந்தித்த ஆறு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து காந்தி நகர் SVP மருத்துவமனையில் இம்ரான் கொதாவாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனையில்…

மேலும்...

கொரோனாவுக்கு இலவச பரிசோதனை குறித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (14 ஏப் 2020): கொரோனாவுக்கு பரிசோதனை செய்ய முன்வரும் எல்லோருக்கும் இலவச பரிசோதனை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து சோதனை செய்வதற்கு தற்போது வரை 157 அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. அதே போல 67 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா சோதனைக்கான கட்டணமாக 4,500 ரூபாயை மத்திய அரசு நியமித்தது. தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனையை இலவசமாக…

மேலும்...

பிரதமர் மோடியின் பேச்சில் இன்றைய மாற்றம் – அதுதான் காரணமா?

புதுடெல்லி (14 ஏப் 2020): பிரதமர் மோடி ஏதாவது பேசினால் பொதுமக்களுக்கு ஏதாவது செய்யச் சொல்லி டாஸ்க் போல் கொடுப்பார். ஆனால் இன்று அப்படி எந்த அறிவிப்பும் வைக்கவில்லை. கொரோனா பரவலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்கள் முன்னிலையில் மீண்டும் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றார்….

மேலும்...

மே.3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!

புதுடெல்லி (14 ஏப் 2020): மே 3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை நிட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று நள்ளிரவுடன் 21 நாள் கெடு முடிவடைகிறது. இதற்கிடையில் இன்று காலை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இச்சூழலில் தற்போது நாடு முழுவதும் மே 3 ஆம்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – ஊடகங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் விவகாரத்தில் இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டம் குறித்து மட்டுமே…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது – 339 பேர் பலி!

புதுடெல்லி (14 ஏப் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி, 200 க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய…

மேலும்...

இறந்த இந்துவின் உடலை வாங்க யாருமில்லை – இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம்கள்!

ஜெய்ப்பூர் (13 ஏப் 2020): இறந்த இந்துவின் உடலை வாங்க யாருமில்லாத நிலையில் அவரது அண்டை வீட்டு முஸ்லிம்கள் இந்து முறைப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் பஜ்ரங் நகர் பட்டா பாஸ்தி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரா. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரா திங்கள்கிழமை காலமானார். ஆனால் அவரது குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லாததால் அவரது உடலை தகனம்…

மேலும்...

கொரோனா சர்ச்சை: தப்லீக் ஜமாஅத் பட்டியலில் முஸ்லிம் அல்லாதவர்கள் – திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (13 ஏப் 2020): கொரோனா தகிடுதத்தங்களில் தப்லீக் ஜமாஅத் பட்டியலில் 108 முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா பரவ தொடங்கியதும், அரசின் மெத்தனப் போக்கை மறக்கடிக்க தப்லீக் ஜமாஅத்தினர் மீது பழி போடத்தொடங்கியது. டெல்லி நிஜாமுத்தீன் தப்லீக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்ற பொய்யான…

மேலும்...

கொரோனா வைரஸ் பரவலை தடுத்தலில் அதிரடி காட்டும் கேரளா!

திருவனந்தபுரம் (13 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவலில் கேரள அரசு காட்டிய பல அதிரடிகளால், கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2வது இடத்தில் இருந்த கேரளா 9வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ”கேரள மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 36 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில்…

மேலும்...

ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!

லக்னோ (13 ஏப் 2020): நாட்டில் தொடரும் ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் பெண் தொழிலாளி ஒருவர் தனது ஐந்து குழந்தைகளை கங்கை நதியில் வீசி எறிந்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் படோஹியில் உள்ள ஜஹாங்கிராபாத் எனும் ஊரைச் சேர்ந்த தம்பதிகள் மிரிதுல் யாதவ் – மஞ்சு ஆகியோர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் என ஐந்து குழந்தைகள் இருந்தனர். தினக்கூலிகளான இவர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் உணவில்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

மேலும்...