தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய பொருளாதாரம் – ப.சிதம்பரம் தாக்கு!

புதுடெல்லி (10 பிப் 2020): இந்திய பொருளாதாரம் தீவிர சிகிச்சப் பிரிவில் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று பேசிய சிதம்பரம், இந்திய பொருளாதாரம் குறித்து கடும் கவலை கொண்டார். மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க மோடி தலைமையிலான அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டது. மிகவும் திறமையற்ற, தகுதியற்ற டாக்டர்களால் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதனை வெளியில் கொண்டு வர தெரியாத தகுதியற்ற டாக்டர்கள், தங்களுக்கு…

மேலும்...

பயணி என்ன பேசினால் உனக்கென்ன? – ஊபர் (UBER) டிரைவர் மீது அதிரடி நடவடிக்கை!

மும்பை (10 பிப் 2020): ஊபரில் பயணித்த பயணி சிஏஏ குறித்து போனில் பேசிய நிலையில் அவரை போலீசில் ஒப்படைத்ததால், ஊபர் டிரைவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது ஊபர் நிறுவனம். ராஜஸ்தானை சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். இவர் முபையில் ஊபரில் பயணித்தபோது, சிஏஏ குறித்தும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்தும் போனில் அவரது நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். இதனை தனது போனில் பதிவு செய்த ஊபர் டிரைவர் ரோஹித் சிங், அந்த கவிஞரை…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லி ஷஹீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை…

மேலும்...

சிகரம் தொட்ட இந்திய சிறுமி!

அர்ஜெண்டினா (10 பிப் 2020): அகோன்காகுவா சிகரத்தில் ஏறி உலக சாதனை 12 வயது இந்திய சிறுமி காம்யா கார்த்திகேயன். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள ஆண்டஸ் மலைகளில் அமைந்துள்ள அகோன்காகுவா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரத்து 962 மீட்டர் (22841.21 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. எண்ணத்தால் கூட எட்ட முடியாத சிகரம் இது. இந்த சிகரத்தின் உச்சியை ஆந்திராவைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் என்ற 12 வயது சிறுமி எட்டிப்படித்து சாதனை படைத்துள்ளார்….

மேலும்...

இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

மும்பை (10 பிப் 2020): முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமம் ஒன்றில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ள இஸ்லாக் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ள இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்த கிராமத்தில். கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு…

மேலும்...

சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!

புதுடெல்லி (10 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது.  விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பெயர்…

மேலும்...

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் – ஒருவர் பலி!

புல்வாமா (09 பிப் 2020): காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 55 வயது குலாம் நபி மிர் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குலாம் நபி மிர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிறு (09 பிப்) மாலை 07:30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குலாம் நபி மிர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த…

மேலும்...

கொரோனாவை எதிர்கொள்ள சீனாவுக்கு உதவ தயார்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (09 பிப் 2020): கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி சீன அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: , கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த…

மேலும்...

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி (09 பிப் 2020): தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை அறிவிக்காததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்று (பிப்.,08) நடந்தது. இந்த தேர்தல்லின் முழு வாக்கு சதவீதத்தையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது குறித்து டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன தான் செய்து…

மேலும்...

மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மரணம்!

கொச்சி (09 பிப் 2020): மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பி.பரமேஸ்வரன் காலமானார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் பரமேஸ்வரன், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்களுடன் இணைந்து பாரதீய ஜனசங் அமைப்பில் தலைவராக இருந்தவர் பரமேஸ்வரன். இந்நிலையில் தனது 91 வது வயதில் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் உயிரிழந்தர். கேரளாவில் ஆலப்புழாவில் பிறந்த இவரது உடல் கொச்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பொதுமக்கள்…

மேலும்...