தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்!

Share this News:

புதுடெல்லி (09 பிப் 2020): தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை அறிவிக்காததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்று (பிப்.,08) நடந்தது. இந்த தேர்தல்லின் முழு வாக்கு சதவீதத்தையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது குறித்து டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளார்.

தேர்தல் ஆணையம் என்ன தான் செய்து கொண்டிருக்கிறது? தேர்தல் முடிந்து பல மணிநேரம் ஆன பின்பும், இன்னும் தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை வெளியிடாதது ஏன்?. இவ்வாறு அவர் டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கிடையே ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர், தனது டுவிட்டர் பக்கத்தில், ரிசர்வ் படைகள் யாரும் இல்லாமல், பாபர்பூர் சட்டசபை தொகுதியில் உள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருக்கிறது என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..


Share this News:

Leave a Reply