ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை பாஜக பயன்படுத்துகிறது என்றும், என்றும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராமர் இந்துக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல, இந்த எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிடுங்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், அமெரிக்கர்கள், ரஷ்யர்கள் என யாராக இருந்தாலும், அவரை நம்பும்…

மேலும்...
Rahul and Modi

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த சூரத் மாவட்ட நீதிபதி வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து…

மேலும்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் மாப்பிள்ளை மட்டும் வரவில்லை. மேலும் மணமகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அடுத்த நாள்தான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். ஆனால் அவரை கணவராக ஏற்க மணப்பெண் தயாராக இல்லை ​. முழு முட்டாளாகவும், தன் சொந்தப் பொறுப்புகளை…

மேலும்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் நாட்டை அவமதித்ததாகக் கூறி ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய பாஜக கோரி வருகிறது…

மேலும்...

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள், பள்ளிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இந்துத்துவா அமைப்புகள் மற்றும் குருபா சமூக அமைப்புகள் நடத்திய ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை…

மேலும்...

ஹோலி பண்டிகையின்போது முஸ்லிம் பெண் மீது தாக்குதல் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்டனம்!

புதுடெல்லி (13 மார்ச் 2023): ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படும் பல காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன், ரிக்ஷாவில் பயணித்த ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை குழந்தைகள் குழு ஒன்று தாக்கும் காட்சிகள் வெளியாகின. பெண்களின் எதிர்ப்பையும் மீறி…

மேலும்...

ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை VIDEO

புதுடெல்லி (11 மார்ச் 2023): ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​ஜப்பானிய பெண்ணை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை இளைஞர்கள் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், இளைஞர்கள் குழு ஒன்று சிறுமியை கீழே பிடித்து வலுக்கட்டாயமாக வர்ணம் பூசி அவள் முகத்தில் தெளித்து, அவள் தலையில் முட்டைகளை வீசுகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும்...

மாட்டிறைச்சி வைத்திருக்காதவரை பொய் குற்றம் சாட்டி பசு பயங்கரவாதிகள் அடித்துக் கொலை!

பாட்னா (11 மார்ச் 2023): பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பசு பயங்கரவாத கும்பல் தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 55 வயது முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் நசீம் குரேஷி. 55 வயது முதியவரான இவர் தனது உறவினர் பேரோஷ் குரேஷி என்பவருடன் சேர்ந்து ஜோகியா கிராமத்திற்குச்…

மேலும்...

காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இணைய வேண்டும் – கம்யூனிஸ்ட் தலைவர் அதிரடி!

தோஹா (10 மார்ச் 2023): எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே, அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், தேசிய மகளிர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆனி ராஜா கூறினார். யுவ கலாசாஹிதி 17வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அனி ராஜா தோஹா வந்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸை ஒதுக்கி வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்கொள்ள முடியாது. பிராந்தியக் கட்சிகளும், தேசிய அளவில் பலம் வாய்ந்த காங்கிரஸும் ஒன்றுபட்டால் மட்டுமே…

மேலும்...

அந்தமானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

போர்ட்பிளேர் (06 மார்ச் 2023): அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும்...