அடுத்த பிரதம வேட்பாளராகும் முதல்வர் ஸ்டாலின் – தேசிய அரசியலில் பரபரப்பு!

சென்னை (02 மார்ச் 2023): இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் உள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஸடாலினை வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சியின்…

மேலும்...

அதானி விவகாரம் ஊடகங்களில் வெளியாவதை தடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடெல்லி (25 பிப் 2023): அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை உச்சநீதிமன்றம் தடுக்காது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெளிவுபடுத்தினார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை நீதிமன்றம் உத்தரவிடும் வரை நிறுத்தக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க மனுதாரரை கேட்டுக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி பி.எஸ்.நரசிங்க மற்றும் ஜே.பி.பர்திவாலா…

மேலும்...

தொடர்ந்து சரிவை சந்திக்கும் அதானி குழுமம் – கண்காணிப்பை தீவிரப்படுத்தும் செபி!

புதுடெல்லி (23 பிப் 2023): பங்குச்சந்தையில் கௌதம் அதானியின் நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ள நிலையில், செபி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கௌதம் அதானியின் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை செபி கண்காணித்து வருகிறது. சட்டச் சிக்கல்களுக்குப் பயந்து, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து ஓரியண்ட் சிமெண்ட்ஸ் விலகியுள்ளது. சுமார் 25 லட்சம் கோடியாக இருந்த அதானி குழும நிறுவனங்களின் தற்போதைய மதிப்பு 7.5 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. நேற்று மட்டும் அதானி எண்டர்பிரைசஸ்…

மேலும்...

வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து சிறுபான்மையினர் பெயர்கள் நீக்கம்!

பெங்களூரு (22 பிப் 2023): கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற மத சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுபான்மை வாக்காளர்களை நீக்குவது எதிர் வரும் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்க ஒரு உத்தி என்று சிறுபான்மை தலைவர்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து, பெங்களூரு பேராயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம், பிப்ரவரி, 15ல் மனு அளித்தனர். அதில் பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி வாக்காளர்…

மேலும்...

இணையத்தில் பரவிய அந்தரங்க படங்கள் – விஸ்வரூபம் எடுக்கும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சண்டை!

பெங்களூரு (20 பிப் 2023): கர்நாடகாவில் ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் அரசுக்க்க் தலைவலியாக மாறியுள்ளது. டி.ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகினி சிந்துரி ஐஏஎஸ் இடையேயான தகராறு, அந்தரங்க புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் பரவும் அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது. மைசூரில் எம்எல்ஏ சாரா மகேஷுடன் ரோகினி சிந்துரி இருக்கும் படத்தை டி ரூபா வெளியிட்டதை அடுத்து இருவருக்கும் பிரச்சனை சூடு பிடித்தது. மைசூர் துணை கமிஷனராக இருந்தபோது கால்வாயை ஆக்கிரமித்து எம்எல்ஏ மாநாட்டு…

மேலும்...

அதானி விவகாரத்தில் எஸ்பிஐ, எல்ஐசி க்கு அழுத்தம் தரப்பட்டதா? – பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

புதுடெல்லி (19 பிப் 22023): அதானி விவகாரத்தில் பிரதமர் மவுனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்யும்படி எல்ஐசி, எஸ்பிஐ நிறுவனங்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா? எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெய்ராம் ரமேஷ் தன் டிவிட்டரில், ‘‘அதானி என்டர்பிரைசஸ் பொதுப்பங்குகளில் முதலீடு செய்யும்படி பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?. இந்த விவகாரத்தில் இன்னமும் பிரதமர் மோடி…

மேலும்...

அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (18 பிப் 2023): அதானி விவகாரத்தில் இதுகுறித்த குழுவிற்கு ஒன்றிய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவை ஆய்வு செய்ய உச்ச ஒன்றிய அரசு குழு ஒன்றை நியமித்து அதன் பெயரை சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குழுவை நியமிக்கும் என்றும். மத்திய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில்…

மேலும்...

ஹஜ் கமிட்டி தலைவர் பதவி – பாஜகவிற்கு காங்கிரஸ் உதவியதா?

புதுடெல்லி (17 பிப் 2023): காங்கிரஸ் உதவியின் மூலம் பாஜக தலைவர் கவுசர் ஜஹான் டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவரானார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, காங்கிரஸ் உறுப்பினரை குழுவில் நியமித்ததன் மூலம் அவமானகரமான தலையீட்டை செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் சார்பாக நாஜியா டேனிஷ் பரிந்துரைக்கப்பட்டார். இறுதியாக அவருக்கு வாக்களிக்காமல் விலகி பாஜக பிரதிநிதியின் வெற்றியை உறுதி செய்தனர்….

மேலும்...

முடிவுக்கு வந்தது பிபிசி அலுவலக சோதனை!

மும்பை (17 பிப் 2023): பிபிசியின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை 60 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. பிபிசியின் 100 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்ற செயலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. வருமான வரித்துறையினர் 10 ஆண்டு கணக்குகளை விரிவாக ஆய்வு செய்துள்ளனர். நோட்டீஸ் கொடுக்கப்பட்டாலும் பிபிசி தரப்பில் எதிர்மறையான அணுகுமுறை இருந்ததே சோதனைகளுக்கு காரணம் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், அவர்களின் தனிப்பட்ட…

மேலும்...

22 நாட்களில் அதானி பங்குகள் பாதிக்கு மேல் இழப்பு!

மும்பை (14 பிப் 2023): ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானி தனது நிகர மதிப்பில் சரிவைக் கண்டு வருகிறார். அவரது நிறுவனப் பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்தது. வெறும் 22 நாட்களில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி இழந்துள்ளார். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, அதானி கிரீன், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், என்டிடிவி, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் உள்ளிட்ட பெரும்பாலான அதானி…

மேலும்...