பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் மாப்பிள்ளை மட்டும் வரவில்லை. மேலும் மணமகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் அடுத்த நாள்தான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். ஆனால் அவரை கணவராக ஏற்க மணப்பெண் தயாராக இல்லை .
முழு முட்டாளாகவும், தன் சொந்தப் பொறுப்புகளை அறியாத பொய்யருடனும் வாழ முடியாது என்று மணமகள் தன் பெற்றோரிடம் தெரிவித்து விட்டார். மேலும் திருமணத்திற்கு செலவழித்த பணத்தை திரும்ப தருமாறு மணமகன் குடும்பத்தாரிடம் மணமகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகனின் கூட்டாளிகள் சிலரை மணமகளின் உறவினர்கள் தடுத்து நிறுத்தியதால் பிரச்சனை சிக்கலானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தலையிட்டு நிலமையை சீர் செய்தனர்.