அயோத்தி வழக்கு தீர்ப்பு – சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (10 நவ 2019): அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. அயோத்தி வழக்கில் இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் மாற்று இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இதுகுறித்து சன்னி வக்ஃப் வாரியம் காலையில், 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மறுசீராய்வு…

மேலும்...

மகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்!

மும்பை (07 நவ 2019): மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் சிவசேனா கட்சி தங்கள் எம்எல்ஏக்கள் கட்சித் தாவலை தடுக்க அவர்களை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றியுள்ளது. மும்பையில் இன்று காலை மராட்டிய ஆளுநர் கோசியாரியை சந்தித்து பேச பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். எனினும், உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று நடைபெற்ற சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு காத்திருக்கும் வகையில் இந்த சந்திப்பை மதியத்துக்கு பாஜக தலைவர்கள் ஒத்திவைத்திருந்தனர். ஆனால் சிவசேனா தரப்பிடம் இருந்து…

மேலும்...

பயங்கரவாத தாக்குதலில் தொடர்பில்லை – 11 வருடங்களுக்குப் பிறகு விடுதலையான அப்பாவி முஹம்மது கவுசர்!

புதுடெல்லி (04 நவ 2019): ராம்பூர் பயங்கரவாத வழக்கில் எந்த வித தொடர்பும் இல்லை என்று முஹம்மது கவுசர் விடுதலை செய்யப் பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், சபாவுதீன், முகம்மது ஷெரீப்…

மேலும்...

காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு!

புதுடெல்லி (23 செப் 2019): காஷ்மீர் விவகாரம், பிரிவு 370 நீக்கம் மற்றும் அஸ்ஸாம் விவகாரங்களில் மர்கஸி ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் அமைப்பு பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்யது உத்தரவிட்டது மத்திய அரசு. மேலும் அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு நாட்டில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் நிலவி வருகின்றன. இந்நிலையில் இவ்விவகாரம் மற்றும் அஸ்ஸாம் விவகாரங்களில் மர்கஸி…

மேலும்...

பாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது!

புதுடெல்லி (20 செப் 2019): பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாமியார் சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் சின்மயானந்த்கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் சின்மயானந்த் அங்கம் வகித்தவர். பாதிப்புக்குள்ளான மாணவி, “என்னை வன்புணர்ந்த சாமியார் சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் உயிரை விட நேரிடும்” என்று கூறியிருந்த நிலையில் சின்மயாநந்த் கைது செய்யப்பட்டுள்ளது…

மேலும்...

இந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு!

புதுடெல்லி (14 ஜூன் 2019): ரயில்வே அதிகாரிகள் இந்தி மற்ரும் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவிற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக…

மேலும்...

மதரஸாக்களில் கோட்சேவோ, பிரக்யாசிங்கோ உருவாகவில்லை: மத்திய அரசுக்கு அசாம்கான் பொளேர் பதில்!

புதுடெல்லி (12 ஜூன் 2019): மதரஸாக்களில் கோட்சேக்களையோ, பிரக்யா சிங் தாகூர் போன்றவர்களையோ உருவாக்குவதில்லை என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் தெரிவித்துள்ளார். மதரஸாக்களில் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள அசாம்கான், “மதரஸாக்களில் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே போன்றோ அல்லது மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியும், பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாகூர் போன்ற பயங்கரவாதிகளையோ உருவாக்குவதில்லை,…

மேலும்...

ஓய்ந்த தூரிகையும் ஒட்டாத வர்ணங்களும்!

இந்தியாவின் பிக்காஸோ என்ற பெருமை பெற்ற ஓவியர் மக்புல்ஃபிதா ஹுசைன் உலகு நீத்துவிட்டார். இந்தியா தன்னைப் பெருமைப்படுத்திய புதல்வர்களுள் மேலும் ஒருவரை இழந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஊடகங்களும், கலைஞர்களும் அவருக்குப்பெரும் புகழஞ்சலி செலுத்துகின்றனர். இருந்தபோதிலும், தன் கடைசி காலத்தில் தாய்நாட்டில் இருக்க முடியாமல் ‘துரத்தியடிக்கப்பட்டு’ வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் குடியுரிமைப் பெற்றிருந்தார் அவர். நாட்டின் ஒரு பெரும் கலைஞனை, கடைசி காலத்தில் ‘துரத்தியடித்த’ தீராப் பழியை இந்திய தேசம் சுமக்கிறது. அதற்குக் காரணமாக, அவருடைய ஒருசில…

மேலும்...