தாஜ்மஹாலில் தொழுகை – வைரலாகும் வீடியோ – உண்மை தன்மையை ஆராய உத்தரவு!

ஆக்ரா(22 நவ 2022): : தாஜ்மஹால் வளாகத்திற்குள் உள்ளதாக கூறப்படும் தோட்டப் பகுதியில் ஒரு பெண் தன்னுடன் அமர்ந்து ஆண் ஒருவர் ‘தொழுகை’ செய்வதாகக் கூறப்படும் வைரலான வீடியோவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையின் ஆக்ரா வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் குமார் படேல் கூறுகையில், “தாஜ்மஹால் வளாகம் என்று கூறப்படும் பகுதியில் ஒரு நபர் தொழுகை நடத்துவதைக் காணும் ஒரு வீடியோ வைரலாவதை…

மேலும்...

71000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்!

புதுடெல்லி (22 நவ 2022): நாட்டின் 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார். இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த வேலைவாய்ப்பு கண்காட்சி. காலை 10.30 மணிக்கு பிரதமர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் குறித்தும் அவர் பேசுவார். ஆர்வமுள்ளவர்களுக்கான ஆன்லைன் பயிற்சித் திட்டமான கர்மயோகி பிரரம்த் திட்டத்தையும் பிரதமர்…

மேலும்...

கூகுள் பே குறித்து பரவும் தகவல் – உண்மை நிலவரம் என்ன?

புதுடெல்லி (21 நவ 2022): மிகவும் பிரபலமான ஆன்லைன் கட்டண பயன்பாடான Google Pay என்பது ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட செயலி அல்ல, எனவே கூகுள் பே மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்கள் ரிசர்வ் வங்கியின் அதிகார வரம்பிற்குள் வராது என்பதுதான் பிரச்சாரம். கூகுள் பே என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மொபைல் பேமெண்ட் அப்ளிகேஷன் ஆகும். ஆனால் பணப் பரிவர்த்தனை செய்யும் போது எப்போதாவது விண்ணப்பம் செயலிழக்கிறது. கணக்கிலிருந்து பணம் வெளியேறி, பெறுநருக்குப்…

மேலும்...

மங்களூரு ஆட்டோ மர்ம பொருள் வெடிப்பு விபத்து அல்ல – டிஜிபி தகவல்!

மங்களூரு (20 நவ 2022) மங்களூரு ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்று டிஜிபி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி என்ற பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்து எரிந்த நிலையில்…

மேலும்...

வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

புதுடெல்லி (19 நவ 2022): நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று நடத்த இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக குற்றஞ்சாட்டியும், பணிகளை அவுட் சோர்ஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இதற்கு 9 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் இந்திய வங்கி சங்கத்துக்கு, அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

இந்தூர் (19 நவ 2022): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மத்திய மற்றும் மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தின் ஆதாரம் குறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் வந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. ஒரு இனிப்பு கடையில் தபால் மூலம் கிடைத்த…

மேலும்...

திப்பு சுல்தானின் சிலையை நிறுவுவதா? – காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்!

பெங்களூரு (18 நவ 2022): கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் செய்யதுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தன்வீர் போலீசில் புகார் அளித்துள்ளார். திப்பு சுல்தானின் மிக உயரமான சிலையை இங்கு நிறுவப்போவதாக அறிவித்ததற்காக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான தன்வீர் சைட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பு உறுப்பினர் ரகு மீது உதயகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான மைசூரு…

மேலும்...

படுக்கையில் இருப்பவர் எப்படி பிரச்சாரத்தில் ஈடுபட முடியும்? – மஹுவா மொய்த்ரா கேள்வி!

கொல்கத்தா (17 நவ 2022): படுக்கையில் இருப்பதாக கூறி ஜாமீன் பெற்றவர் பின்னர் மகளுக்காக எப்படி பிரச்சாரம் செய்கிறார்? என்று மேற்கு வங்க எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறியதாவது: நரோத்யபாத்யா படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி உடல் நலம் கருதி ஜாமீன் பெற்ற குற்றவாளி, மனோஜ் குக்ரானி குஜராத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளார். “நரோடா பாட்யா படுகொலை வழக்கில் மனோஜ் குக்ரானி…

மேலும்...

பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் – அமித்ஷா உறுதி!

புதுடெல்லி (15 நவ 2022): பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய ஊடகமான ‘நியூஸ்18’க்கு அளித்த பேட்டியில் அமித்ஷா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மேலும் அதில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று எங்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது. எந்த மதச்சார்பற்ற நாட்டிலும், அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அதுதான் எங்களின் வாக்குறுதி. அது நிஜமாக்கப்படும்” என்று அமித் ஷா தெளிவுபடுத்தினார்….

மேலும்...

சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்த அமித்ஷா உத்தரவு!

புதுடெல்லி (14 நவ 2022): ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 100 சட்டவிரோத குடியேறிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, முடிந்தால் அவர்களைக் கைது செய்து நாடு கடத்துமாறு அதிகாரிகளுக்கு ஷா பணித்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி நடைபெற்ற உளவுத்துறைக் கூட்டத்தில் அமித்ஷாவின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எல்லையோர மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் தீவிரமயமாக்கல் குறித்து கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமித் ஷா முன்பு அழைப்பு விடுத்துள்ளார். மாநில காவல்துறை தலைவர்கள் கலந்து…

மேலும்...