கடும் குளிரில் சிவயோகி தவம் – பரவும் தகவலும் உண்மை நிலவரமும்!

உத்தரகாண்ட் (28 நவ 2022): உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடும் குளிரில் சிவயோகி தவம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது. படத்தில், ஒருவர் மைனஸ் மூன்று டிகிரியில் தபஸ் செய்வது போல் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காணலாம். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் பரவும் படத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால், ஹரியானாவைச் சேர்ந்த பாபா சர்பங்கி என்ற துறவியின் பேஸ்புக் பக்கத்தில்…

மேலும்...

பசியை போக்க நாணயங்களை சாப்பிட்ட முதியவர்!

பெங்களூரு (28 நவ 2022): பசியை போக்க நாணயங்களை விழுங்கிய 58 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 187 காசுகள் எடுக்கப்பட்டன. கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள லிங்கசுகூரில் 58 வயது முதியவர் பசியால் நாணயங்களை விழுங்கியுள்ளார். இந்நிலையில் அவரது வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள நாணயங்களை மருத்துவர்கள் மீட்டுள்ளனர். ஸ்ரீகுமாரேஷ்வர் மருத்துவமனை டாக்டர்களால் அறுவை சிகிச்சையின் மூலம் முதியவரின் வயிற்றிலிருந்து காசுகளை மீட்டுள்ளனர். எப்போது பசியுடன் இருக்கும் அவர், ஒரு ரூபாய் முதல் ஐந்து…

மேலும்...

டெல்லியில் 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள உவைசி கட்சி!

புதுடெல்லி (28 நவ 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலில் டெல்லியின் வெவ்வேறு சட்டமன்ற வார்டுகளில் AIMIM தனது 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேசிய தலைநகரில் தனது கட்சியின் பொது பேரணிகளில் உரையாற்றிய அசாதுதீன் ஒவைசி, இங்குள்ள பல பகுதிகள் வளர்ச்சியடையவில்லை என்று கூறினார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஒவைசி கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும் டெல்லியின் வளர்ச்சிக்காக யாரும் உழைக்கவில்லை என்றும் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார்.

மேலும்...

மகாராஷ்டிராவில் ரெயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

மும்பை (27 நவ 2022): மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் உள்ள பலார் ஷா ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது. நடைமேடை எண் 1 மற்றும் நடைமேடை எண் 4 ஆகியவற்றை இணைக்கும் பாலம் இன்று இடிந்து விழுந்தது. மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பாலம் இடிந்து ரயில் பாதையில் இருபது அடி உயரத்தில் இருந்து மக்கள் விழுந்தனர். அப்போது அந்த பாதையில் ரயில்கள் எதுவும் ஓடாததால் பெரும்…

மேலும்...

அதிர்ச்சி தரும் அடுத்த வீடியோ லீக் – வெளியிட்ட பாஜக!

புதுடெல்லி (27 நவ 2022): டெல்லி பாஜக வெளியிட்டுள்ள அடுத்த வீடியோ டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோ அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் வீடியோவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் சத்யேந்தர் ஜெயினை மசாஜ் செய்வது, அடுத்த வீடியோவில் சிறப்பு உணவுகள் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற…

மேலும்...

பெண்களின் அழகு குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து – ராம்தேவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு!

மும்பை (27 நவ 2022): ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று பாபா ராம் தேவ் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தானேவில் நடைபெற்ற யோகா முகாமில் பங்கேற்ற ராம்தேவ் அங்கு பங்கேற்றிருந்த பெண்களை பார்த்து பெண்கள் குறித்து கருத்து தெரிவித்தார் “பெண்கள் புடவை மற்றும் சல்வார்களில் அழகாக இருக்கிறார்கள், பெண்கள் எதிலும் அழகாக இருக்கிறார்கள்” என்று ராம்தேவ் தெரிவித்தார். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ் மற்றும் முதல்வர்…

மேலும்...

மீண்டும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (27 நவ 2022): நாட்டில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நேற்று ராஜ்பவனுக்கு விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர். ஆதரவு விலை உள்ளிட்ட விவகாரங்களில் அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு மீறுவதாக வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டத்தின் தொடக்கமாக நேற்றைய போராட்டமாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடன் தள்ளுபடி, லக்கிம்பூர் விவசாயிகளின் மரணத்துக்கு காரணமான அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து…

மேலும்...

குஜராத்தில் ராணுவப் படையினர் இடையே மோதல் – இருவர் சுட்டுக் கொலை!

போர்பந்தர் (27 நவ 2022): குஜராத் மாநிலம் போர்பந்தரில் ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேர்தல் பணிக்கு வந்த ராணுவ வீரர்கள், பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் மணிப்பூரை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இரு ராணுவ வீரர்கள் காந்திநகரில் உள்ள மருத்துவமனையில்…

மேலும்...

மதரஸாக்களுக்கான வருமானம் குறித்து விசாரணை நடத்த அரசு முடிவு!

லக்னோ (22 நவ 2022): உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் வருமான ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக உ.பி அரசு நடத்திய சர்வேயில் பெரும்பாலான மதரஸாக்கள் ஜகாத்தை வருமானமாக அறிவித்துள்ளன. இந்த விசாரணையின்படி1500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் எங்கிருந்து இந்த ஜகாத் (நன்கொடை) பெறுகின்றன என்பது இப்போது கண்டறியப்படும். குறிப்பாக நேபாள எல்லையில் அமைந்துள்ள உ.பி., மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில், வருமான ஆதாரம் குறித்த…

மேலும்...

இந்து பெண் – முஸ்லிம் இளைஞர் திருமணத்திற்கு விண்ணப்பம் – இந்து அமைப்பினர் எதிர்ப்பு!

பெங்களூரு (22 நவ 2022): நாடகாவின் தட்சிண கன்னடா பகுதில் இங்குள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் திருமணத்திற்கு விண்ணப்பித்த கலப்பின ஜோடிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கலப்பின திருமணங்களுக்கு வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக திருமணத்திற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருக்கிறதா என பதிவாளர் அலுவலகம் அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த திருமணத்தை லவ் ஜிஹாத் எனக்க்கூறி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பை பதிவு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. குறிப்பிட்ட இந்து…

மேலும்...