ஹாஜிகளுக்கான சேவையில் அனைத்து இடங்களிலும் (IFF) இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம்!

மக்கா (10 ஜூலை 2022): ஹாஜிகளுக்கான சேவையில் துவக்கம் முதலே தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சேவை செய்து வரும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரதின் தன்னார்வலர்கள் ஹரம், அஸீஸியா, மினா, அரஃபா, முஸ்தலிபா என்று எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன் று அதிகாலையில் மேலும் 150 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஜித்தாவில் இருந்து புறப்பட்டு சென்று இறைவனின் விருந்தினர்களான ஹாஜிகளுக்கு பணியாற்ற இணைந்துள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தியா ஃப்ரெடர்னிடி…

மேலும்...

ஹாஜிகளுக்கான தொடர் சேவையில் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் (IFF)

மக்கா (08 ஜூலை 2022): அரஃபா தான் ஹஜ்’ ஹஜ் என்பதே அரஃபா (வில் தங்குவது) தான்.* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ, திர்மிதி) அரஃபாவிற்கு வருகை தந்த அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹாஜிகளை வரவேற்று அரஃபாவில் அவர்களுக்கு தேவையான பணிவிடைகளையும், நடக்க முடியாத ஹாஜிகளை வீல்சேரில் அமர வைத்து அழைத்து சென்று உதவிகள் செய்து வருவதோடு அதனைத் தொடர்ந்து முஸ்தலிபா மினா…

மேலும்...

மக்காவில் தமிழக ஹஜ் யாத்ரீகர்களுக்கு IWF உணவு விநியோகம்!

மக்கா (07 ஜூலை 2022): மக்காவில் தமிழக ஹாஜிகள் தங்கியிருந்த பில்டிங் எண் 220 / 221 / 222 / 215/ 163/ 167 முழுவதும் இன்று (6-6-22) 1500 உணவு பாக்கெட்கள் வினியோகிக்கப்பட்டன. மேலும் Universal Inspection Company யின் ஹாட்பிளாஸ்கும் பல ஹாஜிக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு ஏற்பாடு செய்த தமிழக நிறுவனமான அல் கரம் கேட்டரிங் குழுவினர்களுக்கும், UIC மேலாளர் அப்துல் மஜித் பத்ருதீன் அவர்களுக்கும் IWF சார்பில் நன்றியும் பிரார்த்தனையும்…

மேலும்...

வளைகுடா நாடுகளை அதிர வைத்த திடீர் நில நடுக்கம்!

துபாய்(02ஜூலை 2022):ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, பந்தர் கமீர் அருகே அதிகாலை 1.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த நில நடுக்கம் ஐக்கிய அரபு அமிரகத்திலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, உம்முல் குவைன் மற்றும் அஜ்மான் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக…

மேலும்...

மக்காவில் ஹஜ் அரஃபா பேருரை இவ்வருடம் முதல் தமிழிலிலும் கேட்கலாம்!

மக்கா (01 ஜூலை 2022): புனித மக்காவில் ஹஜ் அரஃபா பேருரை இனி தமிழிலும் கேட்கலாம் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜின் போது பிறை 9 அன்று அரஃபா பெருவெளியில் உலக மக்களுக்காக உரை நிகழ்த்தப்படுவது முக்கிய நிகழ்வாகும். அரபியில் ஆற்றப்படும் அந்த உரை, பத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் முதல் புதிதாக தமிழ் உட்பட நான்கு மொழிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்த வருட அரஃபா பேருரை…

மேலும்...

பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் – சவுதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (30 ஜூன் 2022): சவூதி அரேபியாவில் புதன் கிழமை மாலை துல் ஹஜ் பிறை தென்பட்டதை அடுத்து, ஜூன் 29, வியாழன் அன்று இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் பிறை 1 என்றும் மற்றும் பக்ரீத் பண்டிகை ஜூலை 9 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 8, வெள்ளிக்கிழமை அன்று ஹஜ்ஜின் மிக முக்கிய தினமான அரஃபா தினம் ஆகும். இதனை அடுத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஜூலை 9 அன்று பக்ரீத்…

மேலும்...

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நில நடுக்கம்!

தெஹ்ரான் (25 ஜூன் 20222): ஈரானின் தெற்கு வளைகுடா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அதேபோல பல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் சனிக்கிழமை காலை நடுக்கத்தை அனுபவித்ததாக தெரிவொத்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையமும் (NCM) நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ட்வீட் செய்துள்ளது

மேலும்...

ஹஜ் யாத்ரீகர்களுக்கான அஜிஸிய்யா புதிய வரைபடம் – IFF அறிமுகம்!

ஜித்தா(24 ஜூன் 2022): இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் தயாரித்த ஹாஜிகளின் அஜீசிய்யா பகுதி வரைபடம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து புனிதப் பயணித்திற்காக வரும் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவையில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வரும் “இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம்” இவ்வருடமும் தனது தன்னார்வ சேவைக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஃபோரம் தயாரித்த ஹாஜிகள் தங்குமிடத்திற்கான அஜீசிய்யா பகுதி வரைபடத்தை வெளியிட்டனர். இந்திய ஹாஜிகளை வரவேற்பதற்கான நிகழ்வில் இந்திய துணைத் தூதர் முஹம்மது ஷாஹித்…

மேலும்...

மனிதம் வளர்ப்போம் – ஜித்தாவில் அணைத்து சமூகத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி!

கடந்த 18-4-22 அன்று ஜித்தா முத்தமிழ் சங்கம்( jems) சார்பாக நடை பெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வந்திருந்த சகோதரர் முஜிபுர் ரகுமான் அவர்கள் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மௌலவிகள் என்றாலே மார்க்க விஷயங்களில் அதிலும் குறிப்பிட்ட வணக்க வழிபாடுகள் குறித்த விஷயங்களையே திரும்ப திரும்ப கேட்டு பழகி விட்ட நமக்கு மௌலவி முஜிபுர் ரகுமானின் பேச்சு நம்மை வியப்பில் ஆழ்த்தியது. நிகழ்காலதிற்கு மிகவும் அவசியமான சிந்திக்க தக்க சிறந்த உரையை நிகழ்த்தினார்….

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு…

மேலும்...