தொழிலாளர்களை வதைத்த 436 நிறுவனங்கள் மீது கத்தார் அரசு நடவடிக்கை!

தோஹா (09 ஆக 2021): கத்தாரில் அரசின் உத்தரவை மீறிய ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்கள் மீது கத்தார் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வும் அளிக்கப் பட்டுள்ளது. “வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை ஓய்வெடுக்க வேண்டும்” என்று கத்தார் அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த இந்த உத்தரவு, எதிர்வரும் செப்டம்பர் 15 வரை நீடிக்கும். இவ்வருடம் நிலவும்…

மேலும்...

சவூதி அரேபியாவில் சமூக கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை!

ரியாத் (09 ஆக 2021): சவூதி அரேபியாவில் கோவிட் பரவலை தடுக்கும் ஒரு பகுதியாக சமூக கூட்டங்களுக்கான தடை தொடரும் என்று சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவலை தடுக்க கடந்த வருடம் முதல் தொடரும் இந்த தடை இப்போது தொடரும் என்று சவூதி சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி திருமண மண்டபங்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் போன்ற இடங்களில் கூடும் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது. கோவிட் பெருக்கத்திற்கு இத்தகைய கூட்டங்களே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும்,…

மேலும்...

கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி!

துபாய் (09 ஆக 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வர அனுமதிவழங்கப்பட்டுள்ளனர். துபாய் திரும்புவதற்கு விசா வைத்திருப்பவர்கள் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றிருந்தால் இரண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்களுக்குப் துபாய் வர அனுமதிக்கப்படுகிறார்கள். இது மான நிறுவனங்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வருவது குறித்து உறுதியற்ற தன்மை இருந்த நிலையில் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு!

துபாய் (08 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 80 சதவிகிதம் பேர் அனுமதிக்கபடுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் 60 சதவீதம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் அதே நேரத்தில், ஒவ்வொரு எமிரேட்டிலும் கட்டுப்பாடுகள் தனித்தனியாக முடிவு செய்யப்படும்.

மேலும்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவூதியில் பள்ளிக்கூடங்களை திறக்க அனுமதி!

ரியாத் (08 ஆக 2021): புதிய கல்வி ஆண்டில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதாக சவுதி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சகம் தயாராகி வருகிறது. கோவிட் 19 பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிய கல்வியாண்டில் பள்ளிகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பள்ளிகளில் காலை கூட்டங்கள் மற்றும் விளையாட்டு…

மேலும்...

கொரோனாவால் உயிரிழக்கும் சுகாதார பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு!

ரியாத் (08 ஆக 2021): சவுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது. சவுதியில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அனைத்து சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு , 5 லட்சம் சவூதி ரியால் (1 கோடி ரூபாய்) வழங்கப்படும் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளதாக சவூதி பத்திரிக்கை நிறுவனம் (SPA) செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் தவிர சிவில் அல்லது இராணுவத் துறைகளில் பணியாற்றியவர்களுக்கும் இழப்பீடு…

மேலும்...

உலகின் சிறந்த விமான நிலையங்கள் 2021 எவை தெரியுமா?

கத்தார் (08 ஆகஸ்ட் 2021): 2021 ஆம் ஆண்டுக்கான, உலகின் தலை சிறந்த விமான நிலையங்களுக்கான விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த விருதை Skytrax நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட பிரிட்டனின் Skytrax நிறுவனம், கடந்த 1989 இலிருந்து உலகின் சிறந்த விமானச் சேவை மற்றும் விமான நிலையங்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதன்படி, கத்தாரின் ஹாமத் இண்டர்நேஷனல் ஏர்போர்ட், உலகின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு,…

மேலும்...

இந்திய பயணிகளை ஏற்க ஃப்ளை துபாய் விமான நிறுவனம் மறுப்பு!

துபாய் (06 ஆக 2021): இந்திய பயணிகளை ஏற்க இயலாது என்று ஃப்ளை துபாய் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று தளர்த்தியது. UAE விசா வைத்திருப்பவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு நேற்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கின. அதேவேளை ஃப்ளை துபாய் அல்லாத விமான நிறுவனங்களால் மட்டுமே முன்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால்…

மேலும்...

ஃபைசர் கோவிட் தடுப்பூசியால் கண் அழற்சி (வீக்கம்) – இஸ்ரேலிய ஆய்வு!

ஜெருசலேம் (06 ஆக 2021): ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு யுவேடிஸ் எனப்படும் கண் அழற்சியின் வீக்கம் உள்ளதாக இஸ்ரேலிய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்து ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு மருத்துவமனையின் யுவேடிஸ் சர்வீஸின் தலைவரான ஹபோட்-வில்னர் அளித்துள்ள விளக்கத்தில், “, ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்ற 21 பேருக்கு முதல் ஷாட் கிடைத்த 14 முதல் 14 நாட்களுக்குள் கண் அழற்சியுடன் கூடிய வீக்கம், யுவைடிஸை உருவாகியதைக் கண்டறிந்தோம். இதனைத்…

மேலும்...

சவூதி ஜித்தாவில் இந்தியர் குத்திக் கொலை!

ஜித்தா (05 ஆக 2021): சவூதி அரேபியா ஜித்தாவில் 45 வயது இந்தியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பூரை சேர்ந்த குஞ்சலவி என்பவர் ஜித்தாவில் வாகனம் ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் நண்பர்கள் சந்தேகம் அடைந்து அவரை தேடியபோது அவர் வாகனத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இந்நிலையில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர்….

மேலும்...