கத்தாரில் கோவிட் 19 தடுப்பூசி போடப்படும் பணி டிசம்பர் 23 முதல் தொடக்கம்!

தோஹா (22 டிச 2020): கத்தாரில் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்டம் (புதன்கிழமை) நாளை தொடங்கும் என்று கத்தார் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகள் முதல் கட்டமாக, நாளை டிசம்பர் 23 துவங்கி ஜனவரி 31 வரை துரிதமாக போடப்படும். முதல் கட்ட தடுப்பூசிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம்…

மேலும்...

சவூதியில் கோவிட் 19 காலத்தில் பெரும் சேவை புரிந்தவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கவுரவிப்பு!

ஜித்தா (20 டிச 2020): சவூதி அரேபியா ஜித்தாவில் கோவிட் 19 காலகட்டத்தில் பெரும் சேவை புரிந்த மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும்  தன்னார்வலர்கள், இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். 19 டிசம்பர் 2020 சனிக்கிழமை மாலை 09 மணிக்கு ஜித்தாவில் கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட விழாவில் குறிப்பிட்ட அளவினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இந்தியன் சோஷியல் ஃபாரம் ஜித்தா பிரிவின் அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

மேலும்...

சவூதி அரேபியாவைத் தொடர்ந்து குவைத் ஓமான் நாடுகளிலும் சர்வதேச விமானங்களுக்கு தடை!

மஸ்கட் (21 டிச 2020): சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான் மற்றும் குவைத் நாடுகளும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளன. இங்கிலாந்தில் காணப்படும் புதிய கோவிட் வைரஸ் படு வேகமாகப் பரவி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. சவூதி அரேபியா ஒரு வாரத்திற்கு தனது எல்லைகளை மூடியுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான், குவைத் நாடுகளிலும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும்...

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் – சவூதி அரேபியாவின் அனைத்து விமானங்களும் ரத்து!

ரியாத் (21 டிச 2020): பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து சவூதி அரேபியா அனைத்து சர்வதேச வர்த்தக விமானங்களையும் ஒரு வாரம் நிறுத்தியுள்ளது இந்த தகவலை சவூதி உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை மேற்கோள் காட்டி சவுதி பத்திரிகை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது. சவூதியில் வசிக்கும் மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முற்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விமான சேவை ரத்து இருக்கும்…

மேலும்...

ஒமானில் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் முறை ரத்து!

மஸ்கட் (17 டிச 2020): ஓமானில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட் ஆய்வு தேவையில்லை என்று பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். அங்கு கோவிட் சோதனைக்குப் பிறகு பிறகு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இருக்காது. இந்தியா உட்பட மொத்தம் 103 நாட்டினர் விசா இல்லாமல் ஓமானுக்குள் நுழைந்து 10 நாட்கள் வரை…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்த 12 இந்திய பெண்கள் மீட்பு!

துபாய் (15 டிச 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த மோசடியினால் சம்பளம் இன்றித் தவித்த 12 இந்திய பெண்கள் மீட்கப் பட்டுள்ளனர். இந்திய துணைத் தூதரகம் மற்றும் அஜ்மான் இந்திய சங்கம், மற்றும் காவல்துறையின் உதவியுடன், இவர்கள் மீட்கப் பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் அனைவரும் முகவர்கள் மூலம் ஏமாற்றப் பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டோரிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்ட பிறகு, அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் படுவார்கள்….

மேலும்...

கத்தார் நாட்டில் பண மதிப்பிழப்பு ( Demonetisation) குறித்த புதிய அறிவிப்பு!

தோஹா (14 டிச 2020): கத்தாரில் பண மதிப்பிழப்பு ( Demonetisatio) குறித்த புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் 18 2020 முதல், படத்தில் உள்ள புதிய ரியால் நோட்டுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. இது, கத்தார் அரசு வெளியிடும் ஐந்தாவது Banknote series ஆகும். இதற்கு முன் 2003 இல், நான்காவது Series வெளியிட்ட சமயம் நன்றாக நினைவிருக்கிறது. அரசு பணமதிப்பழிப்பு பற்றி அறிவித்ததும், அதைத் தொடர்ந்து மக்களுக்கு எவ்வித…

மேலும்...

இந்திய செவிலியர் சவூதி ஜித்தாவில் திடீர் மரணம்!

ஜித்தா (13 டிச 2020): சவூதி ஜித்தாவில் பணிபுரிந்து வந்த இந்திய செவிலியர் மஞ்சு மாரடைப்பால் உயிரிழந்தார். கேரள மாநிலம் கண்ணுரை சேர்ந்த மஞ்சு வர்கீஸ் (37) ஜித்தா நேஷனல் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். மஞ்சவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அனைவரும் இந்தியாவில் உள்ளனர். மஞ்சு 10 வருடங்களாக சவுதியில் பணிபுரிந்து வந்தார்…

மேலும்...

சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேர் கைது!

ரியாத் (09 டிச 2020): சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர். சவூதியின் புதிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி விறகு உள்ளிட்டவை விற்பனை செய்வது குற்றமாகும். இந்நிலையில் குளிர்காலம் தொடங்கியதிலிருந்து விறகுகளுக்கான விற்பனை தீவிரமாக உள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதில் சட்டவிரோதமாக விறகு விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்ற 188 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம்,…

மேலும்...

சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினத்தில் ஜித்தா தமுமுகவிற்கு விருது!

ஜித்தா (07 டிச 2020): சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினமான கடந்த 5-12-20 அன்று ஜித்தா தமுமுகவிற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜித்தாவிலுள்ள இந்திய தூதரகத்தில் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் 2020 Indian Pilgrims Welfare Forum (IPWF) அமைப்பால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தொடர்ந்து உலகமுழுவதும் தன்னார்வலர்கள் கொண்டு மனிதநேயப்பணி செய்யும் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கப்பட்ட து. தமுமுக சார்பில் ஜித்தா மண்டல பொறுப்பாளர் பொறியாளர் கீழை இர்பான் அவர்களிடம் துணைத்தூதர் Y. சாபிர் அவர்கள்…

மேலும்...