தமிழ் பேராசிரியர் சாயபு மரைக்காயருக்கு கவுரவம் – இந்திய அஞ்சல் துறை அஞ்சல் தலை வெளியீடு!

புதுடெல்லி (11 பிப் 2020): தமிழ்துறை பேராசிரியர் சாயபு மரைக்காயர் பெயரில் இந்திய அஞ்சல் துறை அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. சாயபு மரைக்காயர், காரைக்காலில் பிறந்தவர். காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், முதுகலை தமிழ்துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்னூலாசிரியர், கலைமாமணி விருது பெற்றவர், பல்வேறு புத்தகங்கள் எழுதியவர். மேலும் இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து உலகலாவிய மாநாடுகளை நடத்தி புகழ் பெற்றவர். அவரது தமிழ் தொண்டினைப் போற்றும்…

மேலும்...

அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

இடஒதுக்கீடு விவகாரம் – ஆ.ராசா நாடாளுமன்றத்தில் சரமாரி கேள்வி!

புதுடெல்லி (10 பிப் 2020): மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.பி., ஆ.ராசா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடு கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஆ.ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பா.ஜ.க உறுப்பினர்களின் கூச்சலைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “உங்கள் அரசாங்கம் என்று நான் மத்திய…

மேலும்...

நகர்புர உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரலில் நடைபெற வாய்ப்பு!

சென்னை (10 பிப் 2020): நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என முதல்வர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...

பட்டா மாற்றம் செய்ய இனி தாலுக்கா அலுவலகம் செல்ல தேவையில்லை!

சென்னை (10 பிப் 2020): “பட்டா மாற்றம் செய்ய இனி தாலுக்கா அலுவலகம் சென்று அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை!” என்று வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படுகிறது. அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல்…

மேலும்...

பாஜகவில் இணையும் நடிகர் விஜய் – கே.எஸ்.அழகிரி பரபரப்பு தகவல்

தர்மபுரி (09 பிப் 2020): நடிகர் விஜய் விரைவில் பாஜகவில் இணைவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பரபரப்பை கிளப்பியுள்ளார். நடிகர் விஜய் வீட்டில் கடந்த வாரம் திடீரென வருமானவரித் துறையினர் ரெய்டு செய்தனர் என்பதும், இரண்டு நாட்கள் அவருடைய வீட்டில் நடந்த ரெய்டில் எந்தவிதமான முறைகேடான பணமும் கைப்பற்றப் படவில்லை என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டதும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு குறி வைத்தது போல் நடிகர் விஜய்க்கும் பாஜக குறி…

மேலும்...

டெல்டா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (09 பிப் 2020): டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, விவசாய பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர்…

மேலும்...

5 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த 50 வயது முதியவர் கைது!

கோவை (09 பிப் 2020): ஐந்து வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் காமராஜபுரத்தில் உள்ள ஒரு மர குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். அதே குடோனில் ஒரு தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (08/02/2020) அந்த தம்பதியினர் தங்களின் 5 வயது சிறுமியுடன் வேலைக்கு வந்துள்ளனர். பின்பு சிறுமியை தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு…

மேலும்...

திராவிட் பந்து வீச முதல்வர் பேட் பிடிக்க அமர்க்களம்!

சேலம் (09 பிப் 2020): சேலம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 16 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) திறந்து வைத்தார். புதிய கிரிக்கெட் மைதான திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாதெமி இயக்குநருமான ராகுல் டிராவிட், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட்…

மேலும்...

ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல் வெளியீட்டு விழா!

சென்னை (08 பிப் 2020):சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் நூலை வெளியிட இலங்கை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழா சென்னை ஆர்.எஸ்.டி. அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவிற்கு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர்…

மேலும்...