சென்னை (10 பிப் 2020): நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என முதல்வர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.