ரஜினி வீட்டில் போலீஸ் குவிப்பு!

சென்னை (23 ஜன 2020): பதற்றம் காரணமாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது. இதனிடையே, சென்னை போயஸ்…

மேலும்...

விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் விவகாரம் – மீண்டும் பிரசுரமாகும் 1971துக்ளக் கட்டுரை!

சென்னை (22 ஜன 2020): துக்ளக் விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்த 1971 துக்ளக் கட்டுரையை மீண்டும் வெளியிடப் போவதாக அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு…

மேலும்...

ஆசிரியர் தகுதி தேர்வு – வரும் 27 – 28 தேதிகளில் நடைபெறும்!

சென்னை (22 ஜன 2020): அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடக்ஙளுக்கான தேர்வு மே 2 மற்றும் 3ம் தேதி நடைபெற உள்ளதாகவும் டிஆர்பி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த நவம்பரில் விரிவாக வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி…

மேலும்...

8 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை – சிவகாசி அருகே கொடூரம்!

விருதுநகர் (22 ஜன 2020): சிவகாசி அருகே 8 வயது சிறுமியின் சடலம் ஆடைகள் கலைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சித்துராஜபுரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த. கூலித் தொழிலாளி தம்பதிகளின் 8 வயது மகள் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வந்தார். திங்கட் கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மாலை 4 மணிக்கு வீடு திரும்பினார். பின்,…

மேலும்...

விரைவில் பாஜகவிலிருந்து விலகுவோம் – அமைச்சர் அதிரடி!

இளையான்குடி (22 ஜன 2020): “பாஜகவில் இருந்து அதிமுக விரைவில் விலகும்!” என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், அதிமுக பாஜகவிடமிருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி…

மேலும்...

ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி மறைமுக தேர்தல்!

சென்னை (22 ஜன 2020): “ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும்!” என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 42…

மேலும்...

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டவர்கள் யார் யார்? – நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (22 ஜன 2020): “சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்த 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்!” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை ஒருவர் பதிவிட்டிருந்தார். இவ் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று…

மேலும்...

ரஜினிக்கு ஆதரவாக குஷ்பு கருத்து!

சென்னை (22 ஜன 2020): நடிகர் ரஜினியின் நிலைப்பாட்டிற்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். ரஜினியின் நிலைப்பாட்டிற்கு அதிகமான…

மேலும்...

ஈசிஆர் சாலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (22 ஜன 2020): ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏ.ரங்கநாதன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலா், உத்தண்டி, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு பங்களாக்களைக் கட்ட அனுமதி அளிக்க கோரி வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு விசாரணையின் போது உத்தண்டி, சோழிங்கநல்லூா், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் நடிகா் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கடற்கரை ஒழுங்குமுறை…

மேலும்...

ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் சர்க்கரை நிறுவனத்தில் வேலை!

சென்னை (22 ஜன 2020): தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. . மொத்த காலியிடங்கள்: 02 பணியிடம்: சென்னை பணி: Junior Assistants (JA) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000 + இதர சலுகைகள் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 20 – 35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: http://tasco.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள…

மேலும்...