ரஜினிக்கு ஆதரவாக குஷ்பு கருத்து!

Share this News:

சென்னை (22 ஜன 2020): நடிகர் ரஜினியின் நிலைப்பாட்டிற்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

ரஜினியின் நிலைப்பாட்டிற்கு அதிகமான அளவில் எதிர்ப்பும் பாஜக தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், “சரியோ தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply