ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு!

திருச்சி (06 ஜன 2020): திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுந்தமாகவும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 26–ந்தேதி தொடங்கியது. அதன் பின் பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய…

மேலும்...

கலங்கடித்த ஏழை மாணவி – கண் கலங்கிய நடிகர் சூர்யா (வீடியோ)

நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் பயின்ற மாணவி அவரது வாழ்க்கை குறித்தும் பேசியபோது கண்கலங்கினார் நடிகர் சூர்யா. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நெய்வாசல் என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் காயத்ரி. ஏழை தொழிலாளியான அவரது அப்பா, தன் மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அகரம் ஃபவுண்டேஷனை நாடினார். இதற்கிடையே புற்று நோய் பாதிப்பால் காயத்ரியின் அப்பா இறந்துவிட, நிலைகுலைந்து போனது காயத்ரியின் குடும்பம். எனினும் அகரம் ஃபவுண்டேஷனின் உதவியுடன்…

மேலும்...

நாங்க மூன்றாவது இடம் தெரியுமா? – சங்கு பங்கு என அலட்டிய ராஜேந்தர்!

சென்னை (05 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்காமலேயே ஒரு இடத்தில் மூன்றாவது இடம் பிடித்தோம் என்று என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார். டி.ராஜேந்தர் இன்று சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் வென்று தலைவராகியுள்ள நிலையில் அவர் சந்தித்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘’உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது மக்கள் சிந்தித்து…

மேலும்...

தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

சென்னை (05 ஜன 2020): ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 8 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு திராவிட…

மேலும்...

ஆளுங்கட்சியின் அராஜகத்தையும் மீறிய வெற்றி – ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை (03 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகத்தையும் மீறி வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி தி.மு.க.கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளபடியே இது நமக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும். எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வு!

சென்னை (05 ஜன 2020): பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.78.48 ஆகவும், நேற்றைய விலையில் இருந்து டீசல் 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.39 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு, இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

மேலும்...

போலி வீடியோவும் கிரண் பேடியும்!

புதுவை (05 ஜன 2020): புதுவை ஆளுநர் கிரண் பேடி, அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த போலி வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் சூரியனில் இருந்து வெளிப்படும் சப்தம் “ஓம்’ என்ற மந்திரத்தை ஒத்து இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது. ஆளுநரால் பகிரப்பட்ட அந்த  வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று சுட்டுரையில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். pic.twitter.com/ArRwljjDVE — Kiran Bedi (@thekiranbedi) 4 January 2020 ஆளுநர் விளக்கம்: இதுகுறித்து ஆளுநர்…

மேலும்...

தர்பார் இசை – அனிருத்துக்கு எதிராக கொந்தளித்த இசை கலைஞர்கள்!

சென்னை (05 ஜன 2020): இசையமைப்பாளர் அனிருத் தமிழக இசைக் கலைஞர்களைப் புறக்கணித்ததாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தீனா தெரிவிக்கையில், “ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் தர்பார் படத்தில் தமிழக இசைக்கலைஞர்கள் யாரையும் பயன்படுத்தவில்லை. ஏற்கனவே முந்தைய படத்தில் அவரிடம் கேட்டிருந்தோம், அவர் அடுத்த படத்தில் வாய்ப்பளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை!” என்றார். மேலும் பேசுகையில், “நாங்கள் மிகவும் நலிந்த நிலையில்…

மேலும்...

அதிமுக தலைமை குறித்து அன்வர் ராஜா ஓப்பன் டாக்!

சென்னை (04 ஜன 2020): அதிமுகவுக்கு ஒரு முஸ்லிம் கூட ஓட்டு போட மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது மகனையும், மகளையும் நிறுத்தி படுதோல்வி அடைந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தே நான் என் பிள்ளைகள் இருவரையும் நிறுத்தினேன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எங்கள் ஊரில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரளித்ததால் அதிமுகவுக்கு எப்படி மக்கள் ஓட்டு போடுவார்கள்?, அது எனக்கு…

மேலும்...

மிஸ்டு கால் அலப்பறை – அசிங்கப்பட்ட பாஜக!

சென்னை (04 ஜன 2020): மிஸ்டு கால் மூலம் கட்சியை வளர்த்தாக கூறப்பட்ட நிலையில் மிஸ்டு கால் முறை மூலம் அடுத்த அசிங்கத்தை சந்தித்துள்ளது பாஜக. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மக்களை ஒன்று திரட்ட மிஸ்டு கால் முறையை அறிமுகப்படுத்தியது பாஜக. அதற்காக ஒரு போன் நம்பரையும் அறிமுகப்படுத்தியது. அதை பரப்புவதற்கு சில கீழ்த்தரமான முறைகளை கையில் எடுத்துள்ளது. ட்விட்டரில் சில பா.ஜ.க ஆதரவாளர்கள் அந்த போன் நம்பரை பதிவிட்டு, இது ஒரு பெண்ணின் போன் நம்பர்…

மேலும்...