விருதுநகர் அருகே போலீசார் துப்பாக்கிச் சூடு!
விருதுநகர் (04 ஜன 2020): விருதுநகா் அருகே முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு ஒரு தரப்பினா் சென்ற காா்கள் மீது மற்றொரு தரப்பினா் கல்வீசித் தாக்குதல் நடத்தினா். இதனால் அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க போலீஸாா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியை அடுத்துள்ளது செங்குளம் கிராமம். இக்கிராமத்தில் இருதரப்பினரிடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செங்குளத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை சில…